Tuesday, March 14, 2017

நடிகை கஸ்தூரியை சீண்டிய அந்த ஹீரோ/அரசியல்வாதி யார்?

ஹீரோவாக இருந்து அரசியல்வாதியாக ஆன ஒருவர் தான் ஹீரோயினாக நடித்தபோது தன்னை படாதபாடு படுத்தியதாக நடிகை கஸ்தூரி தெரிவித்துள்ளார்.

ஒரு காலத்தில் பிரபலமான ஹீரோயினாக இருந்தவர் கஸ்தூரி. அமெரிக்காவில் பணிபுரியும் மருத்துவரை திருமணம் செய்து கொண்டு அங்கேயே செட்டில் ஆகிவிட்டார். அவருக்கு ஒரு மகளும், மகனும் உள்ளனர்.
இந்நிலையில் மகள் நடனம் கற்றுக் கொள்வதற்காக சென்னை வந்துள்ள கஸ்தூரி பிரபல ஆங்கில நாளிதழுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது,

சில படங்களில் இருந்து நான் வெளியேற்றப்பட்டுள்ளேன். காரணம், சிலர் சொன்னபடி எல்லாம் கேட்டு அட்ஜெஸ்ட் செய்தாதது தான். அதுவும் இதுக்கு எல்லாம் ஒரு ஹீரோ தான் காரணம்.

அந்த ஹீரோ தற்போது அரசியல்வாதியாக உள்ளார். அவருக்கு ஈகோ விஷயம் என்று நினைக்கிறேன். அவரை நான் மிகவும் மதிக்கிறேன். ஆனால் அவரால் இல்லை என்ற பதிலை மட்டும் ஏற்கவே முடியாது.

அந்த ஹீரோவுடன் நான் நடித்த ஒரு படம் முடியும் வரை என்னை கொடுமைப்படுத்தினார். மேலும் என்னை இரண்டு படங்களில் இருந்து வெளியேற்றினார்.

அந்த ஹீரோ என் அம்மாவுக்கு போன் செய்து உங்கள் மகள் என்னிடம் நல்ல பெயர் எடுப்பது மிகவும் முக்கியம் என்றார். என் அம்மா அவர் சொன்னதை காதிலேயே வாங்கவில்லை. இது அத்துடன் நின்றுவிடவில்லை என கஸ்தூரி தெரிவித்துள்ளார்.

1 comment: