1/17/2019

எல்லா பேட்டையிலும் வசூலில் ரஜினியனின் பேட்டையை முந்திய அஜித்தன் விஸ்வாசம்...

எல்லா பேட்டையிலும் வசூலில் ரஜினியனின் பேட்டையை முந்திய அஜித்தன் விஸ்வாசம்...

விஸ்வாசம், பேட்ட படங்களின் தமிழக வசூல் நிலவரம் தெரிய வந்துள்ளது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த பேட்ட படமும், சிவா இயக்கத்தில் அஜித் நடித்த விஸ்வாசம் படமும் பொங்கல் ஸ்பெஷலாக ஒரே நாளில் வெளியானது. தமிழகத்தில் விஸ்வாசத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.

தமிழகத்தில் பேட்ட படத்தை விஸ்வாசம் முந்தியுள்ளது. பேட்ட படம் தெலுங்கு மற்றும் இந்தியிலும் வெளியிடப்பட்டது. இந்தியில் பேட்டயால் தரமான சம்பவம் செய்ய முடியாமல் போயுள்ளது. அங்கு சிம்பா, யூரி ஆகிய படங்கள் பாக்ஸ் ஆபீஸை ஆதிக்கம் செய்துள்ளன.

அனைத்து பாக்ஸ் ஆப்பீஸ் அப்டேட்டுகளும் போலி...சன் பிக்சர்ஸ் மீது கடுப்பாகிய தல ரசிகர்கள்...

பேட்ட படம் ரிலீஸான 6 நாட்களில் தமிழகத்தில் மட்டும் ரூ. 69.68 கோடி வசூலித்துள்ளது. அதே 6 நாட்களில் விஸ்வாசம் தமிழகத்தில் ரூ. 92.30 கோடி வசூல் செய்துள்ளது. பேட்ட சென்னை பாக்ஸ் ஆபீஸில் 6 நாட்களில் ரூ. 6.34 கோடியும், விஸ்வாசம் ரூ. 5.51 கோடியும் வசூலித்துள்ளன.

விஸ்வாசம் படம் ஒரேயொரு மொழியில் வெளியாகி உலக அளவில் ரூ. 100 கோடி வசூல் செய்துள்ளதை அஜித் ரசிகர்கள் கொண்டாடுகிறார்கள்.

மலேசியா கோல்டன் ஸ்க்ரீன்ஸ் சினிமாஸில் முதலிடத்தில் இருந்த பேட்டயை இரண்டாவது இடத்திற்கு தள்ளி முந்தியுள்ளது விஸ்வாசம் என்பது குறிப்பிடத்தக்கது. பிரான்ஸிலும் பேட்ட படத்தை முந்தியுள்ளது விஸ்வாசம்.

அனைத்து பாக்ஸ் ஆப்பீஸ் அப்டேட்டுகளும் போலி...சன் பிக்சர்ஸ் மீது கடுப்பாகிய தல ரசிகர்கள்...

அனைத்து பாக்ஸ் ஆப்பீஸ் அப்டேட்டுகளும் போலி...சன் பிக்சர்ஸ் மீது கடுப்பாகிய தல ரசிகர்கள்...

பேட்ட மற்றும் விஸ்வாசம் படங்களின் வசூல் நிலவரங்கள் குறித்து சன் பிக்சர்ஸின் டுவிட்டர் பதிவு சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு அஜித் ரசிகர்கள் பதில் டுவிட் செய்து பதிலடி கொடுத்து வருகின்றனர். 

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கார்த்திக் சுப்புராஜ் இயகத்தில் ரஜினி நடித்த பேட்ட திரைப்படம் வெளியானது. அதேபோல் சிவா இயக்கத்தில் ரஜினி நடித்த பேட்ட திரைப்படம் வெளியானது. 
இரு படங்களுமே வெற்றிப் படங்களாக அமைந்தாலும், அஜித்தின் விஸ்வாசம் திரைப்படம் தமிழக அளவில் முதலிடம் பிடித்துள்ளது. உலக அளவில் பேட்ட திரைப்படம் வசூலில் முதலிடத்தில் இருந்தாலும், தமிழகத்தைப் பொறுத்தவரை அஜித்தின் விஸ்வாசம் அதிக வசூல் பெற்றுள்ளதாக தகவல் வெளியானது. இதனை முன்வைத்து அஜித் ரசிகர்கள் செமயாக கொண்டாடி வந்தனர். 
இந்நிலையில், 'பேட்ட' படத்தை தயாரித்துள்ள சன் பிக்சர்ஸ் நிறுவனம் "பாக்ஸ் ஆப்பீஸை அப்டேட் செய்யும் அன்பர்களே, நீங்கள் எப்படி இவ்வளவு உறுதியாக பேட்ட படத்தின் பாக்ஸ் ஆஃபீஸ் எண்களை கூறுகிறீர்கள் என்பது எங்களுக்குப் புரியவில்லை. ஏனெனில் தமிழகம் முழுவதும் உள்ள 600-க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் இருந்து எங்களுக்கே அதிகாரபூர்வ தகவல் வரவில்லையே. ரசிகர்களே இந்தப் பொங்கலை உங்கள் விருப்பமான ஹீரோக்களோடு கொண்டாடுங்கள். தவறான செய்திகளை நம்ப வேண்டாம்" என்று கூறியுள்ளது. 

சன் பிக்சர்ஸின் இந்தப் பதிவுக்கு வசூல் நிலவரத்தை வெளியிட்டு அஜித் ரசிகரகள் பலரும் பதிலடி கொடுத்து வருகின்றனர். அதில் சர்கார் பட ரிலீசின் போது மட்டும் எங்களது கருத்துகளை ரீ -டுவீட் செய்து கொண்டாடினீர்கள். இப்போது மட்டும் என்ன ஆனது” என்று பலர் டுவீட் செய்து ருகின்றனர். சன் பிக்சர்ஸின் இந்தக் கருத்து ட்விட்டரில் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

1/16/2019

இனி ரஜினியோட வாக்கை காப்பாற்ற ஏ. ஆர். முருகதாஸ் நினைச்சா மட்டும்தான் முடியும்...

இனி ரஜினியோட வாக்கை காப்பாற்ற ஏ. ஆர். முருகதாஸ் நினைச்சா மட்டும்தான் முடியும்...

ஏ. ஆர். முருகதாஸ் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த பேட்ட படம் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த படத்தை அடுத்து ரஜினி ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் நடிக்க உள்ளார். அது அரசியல் சார்ந்த படம் என்று கூறப்படுகிறது.

ரஜினிக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷை நடிக்க வைக்க முடிவு செய்துள்ளாராம் ஏ. ஆர். முருகதாஸ். தொடர்ந்து சீனியர் ஹீரோக்களுடன் ஜோடி போடும் கீர்த்தி இந்த படம் மூலம் சூப்பர் சீனியரின் ஜோடியாக உள்ளார்.

தன் மகள்களை விட சிறு வயது நடிகைகளுடன் இனி ஜோடி சேர்ந்து நடிக்கப் போவது இல்லை என்று காலா இசை வெளியீட்டு விழாவில் ரஜினி தெரிவித்திருந்தார். இந்நிலையில் அவரின் மகள்களை விட மிகவும் சிறியவரான கீர்த்தியுடன் சேர்ந்து நடிக்க உள்ளார்.

பேட்ட, சர்கார் வசூல் விபரத்தால் அசிங்கப்பட்ட சன் டிவி... ஆதாரம் உள்ளே

ஹீரோயின் வயது பற்றி ரஜினிகாந்த் தெரிவித்தது ஏ. ஆர். முருகதாஸுக்கும் தெரியாமல் இருக்காது. ஹீரோயின் தேர்வில் ரஜினி தலையிடுவது இல்லை. இந்நிலையில் இந்த படத்தின் ஹீரோயின் மாற்றப்படுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

முருகதாஸ் படத்தில் ரஜினி முதல்வர் ஆகிறாராம். அந்த தகவல் அறிந்தவர்கள் முதலில் அவரை கட்சி துவங்கச் சொல்லுங்கள் அப்புறம் முதல்வர் ஆகலாம். அவரால் படத்தில் மட்டுமே முதல்வர் ஆக முடியும் என்று விமர்சித்துள்ளனர்.
42 வயது மூத்த நடிகருடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ்... அதிர்ச்சியில் ரசிகர்கள்

42 வயது மூத்த நடிகருடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ்... அதிர்ச்சியில் ரசிகர்கள்

கீர்த்தி சுரேஷ் தமிழ் சினிமாவில் தற்போது உச்சத்தில் இருக்கும் நடிகை. விஜய், விக்ரம், சூர்யா என முன்னணி நடிகர்கள் அனைவருடனும் நடித்துவிட்டார்.

தமிழ் மட்டுமின்றி மகாநடி படத்தின் மூலம் தெலுங்கிலும் கீர்த்தி சுரேஷ் கலக்கி வருகின்றார்.

இந்நிலையில் ரஜினிகாந்த் அடுத்து முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

இப்படத்தில் இவருக்கு ஜோடியாக நடிக்க கீர்த்தி சுரேஷிடம் தான் முதற்கட்ட பேச்சு வார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகின்றது.

அப்படி அவர் இந்த படத்தில் நடிக்க சம்மதித்தால் தன்னை விட 42 வயது அதிகமான ஹீரோவிற்கு ஜோடியாக நடிக்கும் ஹீரோயின் என்ற பெயரை கீர்த்திக்கு கிடைக்கும்.
அகிலமெங்கும் அடிச்சுதூக்கும் வசூல்...விஸ்வாசம், பேட்ட 5ம் நாள் வசூல் விபரம்...

அகிலமெங்கும் அடிச்சுதூக்கும் வசூல்...விஸ்வாசம், பேட்ட 5ம் நாள் வசூல் விபரம்...

விஸ்வாசம், பேட்ட இந்த பொங்கல் விருந்தாக திரைக்கு வந்துள்ள படங்கள். இந்த இரண்டு படங்களுமே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் தமிழகத்தை தாண்டி மற்ற அனைத்து இடங்களிலுமே ரஜினியின் கை பல மடங்கு அதிகமாக உயர்ந்துள்ளது.

ஆனால், தமிழகத்தில் மட்டும் அஜித்தின் கை தான் ஓங்கியுள்ளது. தற்போது தமிழகத்தில் மட்டும் விஸ்வாசம் எப்படியும் ரூ 60 கோடி வரை வசூல் செய்திருக்கும் என கூறப்படுகின்றது. அதேபோல் பேட்ட ரூ 48 கோடி வரை தமிழகத்தில் வசூல் செய்திருக்கும் என தெரிகின்றது.

மேலும், இன்னும் விடுமுறை முடியாததால், எப்படியும் வசூல் நாளுக்கு நாள் அதிகரிக்கும் என்று தான் கூறப்படுகின்றது. இந்நிலையில் மலேசியாவில் இந்த இரண்டு படங்களுமே வசூல் வேட்டை நடத்தி வருகின்றதாம்.

இதில் முதலிடத்தில் பேட்ட இருந்தாலும், ஒரு சில லட்சங்கள் வித்தியாசத்தில் விஸ்வாசம் இரண்டாவது இடத்தில் உள்ளதாம். இந்த இரண்டு படங்களுக்கு அப்றம் தான் ஹாலிவுட் மற்றும் அந்த ஊர் படங்களே உள்ளதாம்.
ரஜினி-அஜித் மோதல் விஜய்யின் வளர்ச்சியை கடுப்படுத்தவே திட்டமிட்டு உருவாக்கப்பட்டது...யாரு சொன்னாங்க தெரியுமா...?

ரஜினி-அஜித் மோதல் விஜய்யின் வளர்ச்சியை கடுப்படுத்தவே திட்டமிட்டு உருவாக்கப்பட்டது...யாரு சொன்னாங்க தெரியுமா...?

ரஜினி நடிப்பில் பேட்ட, அஜித் நடிப்பில் விஸ்வாசம் என இரண்டு படங்கள் இந்த பொங்கலுக்கு வெளிவந்துள்ளது. இந்த இரண்டு படங்களும் ரசிகர்கள் மத்தியில் செம்ம வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில் இந்த இரண்டு படங்களுக்கும் பாக்ஸ் ஆபிஸ் வசூல் குவிந்து வருகின்றது. அப்படியிருக்க இவர்கள் போட்டி வேண்டுமென்றே உருவாக்கப்பட்டதா? என்ற கேள்வியை பிரபல நியூஸ் சேனல் ஒரு சில தகவல்களை வெளியிட்டுள்ளனர்.

இதில் குறிப்பாக ரஜினி எப்போதும் உச்சத்தில் இருக்கும் நடிகர், ஆனால், அடுத்தக்கட்ட நடிகர்களான விஜய், அஜித்தின் வளர்ச்சி அதை கொஞ்சம் தகர்த்துள்ளது.

இதற்கு ரஜினியின் அரசியல் குறித்த மேடைப்பேச்சுகளே காரணம் என்றும், இதுமட்டுமின்றி விஜய்யின் வளர்ச்சியை கடுப்படுத்தவே ரஜினி-அஜித் மோதல் திட்டமிட்டே உருவாக்கப்பட்டது என அந்த நியூஸ் சேனல் கூறியுள்ளது.
கோவிந்தா கோவிந்தா...இந்த பொண்ணு பாத்த வேலையால பிரபல சமுக வலைத்தளத்திற்கு 8,436 கோடி சுவாகா...

கோவிந்தா கோவிந்தா...இந்த பொண்ணு பாத்த வேலையால பிரபல சமுக வலைத்தளத்திற்கு 8,436 கோடி சுவாகா...

சினிமா, அரசியலில் இருந்தால் மட்டுமே பிரபலம் ஆக முடியும் என்பதெல்லாம் அந்தக் காலம், சமுக வலைத்தளம் ஆதிக்கம் செலுத்தும் நடைமுறை வாழ்க்கையில் கோடிக்கணக்கானோர் பிரபலமாகவும், பல கோடிப் பேர் பாலோ செய்யும் அளவிற்கும் ஒரு சக்திவாய்ந்த நபராகவும் இருக்கிறார்கள். அப்படிப்பட்ட ஒருவர் தான் Kylie Jenner. இவர் டிவி தொகுப்பாளர், மாடல், சமுக வலைத்தளத்தில் பிரபலம் எனப் பல வெற்றி முகத்தைக் கொண்டுள்ளார். இன்னும் சுருக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால் இவர் கிம் கர்தாஷியன்-இன் தங்கை.

சமுக வலைத்தள உலகில் பேஸ்புக், இன்ஸ்டாகிராம், டிவிட்டர் போன்று புகழ்பெற்று விளங்கும் ஸ்னாப்சேட், தனது செயலியில் சில மாற்றங்களைச் சில நாட்களுக்கு முன்பும் வெளியிட்டது. பல கோடிப்பேர் பயன்படுத்தும் இந்த ஸ்னாப்சேட் செயலியின் புதிய மாற்றங்கள் பல வாடிக்கையாளர்களுக்குப் பிடிக்கவில்லை எனக் கருத்துகள் நேரடியாகவும் மறைமுகமாகவும் ஸ்னாப்சேட் நிறுவனத்திற்குத் தெரிவிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் ஸ்னாப்சேட் தளத்தில் புகழ்பெற்று விளங்கும் கெய்லி ஜென்னர் தனது ஸ்னாப்சேட் கணக்கில், தான் இனி ஸ்னாப்சேட் செயலியை பயன்படுத்தப்போவதில்லை என்று தெரிவித்தார்.

கெய்லி ஜென்னர் செய்ய டிவிட்டுக்கு என்ன காரணம் என ஆய்வு செய்கையில் இரு காரணங்கள் கண்டுப்பிடிக்கப்பட்டுது. ஒன்று சமீபத்தில் அவர் பெண் குழந்தை பெற்றுள்ளார். குழந்தையைக் கவனிக்கும் வேண்டியதால் தான் ஸ்னாப்சேட்-க்கு வரப்போவதில்லை எனக் கருதப்படுகிறது. மற்றொன்று இந்நிறுவனம் அறிமுகம் செய்த புதிய மாற்றங்கள் பிடிக்காத காரணத்தால் இதைப் பதிவு செய்துள்ளார். ஆனால் 2வது காரணமே அனைத்துத் தரப்பினராலும் ஏற்கப்பட்டுள்ளது.

இது செய்தி அமெரிக்கா மட்டும் அல்லாமல் உலகம் முழுவதும் பரவியது மட்டும் அல்லாமல் ஸ்னாப்சேட் நிறுவனத்தை நேரடியாகப் பாதித்தது.

இந்தச் செய்தியால் வியாழக்கிழமை ஒரு நாள் வர்த்தகத்தில் மட்டும் ஸ்னாப்சேட் நிறுவனத்தின் பங்குமதிப்பு அமெரிக்கப் பங்கு சந்தையில் 6.1 சதவீதம் வரையில் சரிந்து சுமார் 1.3 பில்லியன் டாலர் அளவிலான சந்தை மூலதனத்தை இழந்துள்ளது. இது இந்திய ரூபாய் மதிப்பில் 8,436 கோடி ரூபாய்.

கெய்லி ஜென்னர்-ஐ மட்டும் ஸ்னாப்சேட்டில் சுமார் 2.45 கோடி பேர் பின் தொடர்கின்றனர்.

அவை அனைத்தையும் தாண்டி கெய்லி ஜென்னர் டிவிட்டரில், நான் மட்டும் தான் ஸ்னாப்சேட்-ஐ திறக்கவில்லையா? இல்லை என்னைப்போல் வேற யாரேனும் இருக்கிறீர்களா.. ரொம்ப வருத்தம்.. என டிவிட் செய்துள்ளார். இதன் மூலம் 2வது கணிப்பு தான் உண்மையான காரணம் எனத் தற்போது உறுதியாகியுள்ளது.

கெய்லி ஜென்னர் செய்த ஒரு டிவீட்டால் ஸ்னாப்சேட் இழந்த 8,500 கோடி ரூபாயை எப்படி ஈடு செய்யப்போகிறது என்பது இன்னும் ஸ்னாப்சேட் முடிவு செய்யவில்லை. மேலும் டிசைன்களை மீண்டும் பழைய வடிவத்திற்கே மாற்றப்போகிறதா இல்லை தொடர்ந்து இதே வடிவத்தில் இயங்க உள்ளதா என்பது குறித்து எதுவும் ஸ்னாப்சேட் தெரிவிக்கவில்லை.

1/15/2019

பேட்ட, சர்கார் வசூல் விபரத்தால் அசிங்கப்பட்ட சன் டிவி... ஆதாரம் உள்ளே

பேட்ட, சர்கார் வசூல் விபரத்தால் அசிங்கப்பட்ட சன் டிவி... ஆதாரம் உள்ளே

நடிகர் விஜய் நடித்த சர்கார் படத்தை தயாரித்திருந்த சன் பிக்சர்ஸ் தான் தற்போது ரஜினி நடித்த பேட்ட படத்தையும் தயாரித்துள்ளது.

இந்நிலையில் பேட்ட படத்தின் தமிழ்நாட்டு வசூல் அஜித்தின் விஸ்வாசத்தை விட குறைவு என பாக்ஸ் ஆபிஸ் ட்ராக்கர்கள் கடந்த சில நாட்களாக கூறி வருகின்றனர்.

ஆதனால் பாக்ஸ்ஆபிஸ் ட்ராக்கர்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் ட்விட்டரில் பதிவிட்டுள்ளது. "இன்னும் எங்களுக்கு கூட முழு வசூல் விவரம் வரவில்லை" என குறிப்பிட்டிருந்தனர்.

ஆனால் சர்கார் படம் இரண்டு நாளில் 100 கோடி வசூல் என அதே பாக்ஸ் ஆபிஸ் ட்ராக்கர்கள் பதிவிட்ட போது அதை ஏற்றுக்கொண்டு சன் பிக்சர்ஸ் ட்விட்டரில் ரீட்வீட் செய்தது.

சர்கார் வசூல் விவரத்தை ஏற்றுக்கொண்ட சன் பிக்சர்ஸ் பேட்ட வசூல் பற்றி வரும் செய்திகளை எதிர்ப்பது ஏன் என பலரும் சமூக வலைத்தளங்களில் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.